வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்
வங்காளதேசத்தில் செயல்படும் அரசியல் மற்றும் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம்வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம் என்பது 1864 ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டம் மற்றும் வங்காள தேச அரசாங்கத்தின் அரசு சாரா அமைப்பு விவகார பணியகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசியல் மற்றும் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி அமைப்பாகும். இச்சமூகம் பல முஸ்லிம் தலைவர்களால் 1952 இல் டாக்காவில் கிழக்கு பாக்கித்தானின் ஆசியச் சமூகமாக நிறுவப்பட்டது. பின்னர், 1972 இல் மறுபெயரிடப்பட்டது. பாக்கித்தானின் புகழ்பெற்ற இசுலாமிய வரலாற்றாசிரியரும், தொலியல் ஆய்வாளருமான அகமது அசன் தானி இந்த சமூகத்தை நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு வங்காள மொழியியலாளர் முகமது சாகிதுல்லா உதவி செய்தார். பழைய டாக்காவில் உள்ள டாக்கா பல்கலைக்கழகத்தின் கர்சன் மாளிகையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நிம்தாலியில் இந்த சமூகத்தின் அலுவலகம் உள்ளது.
Read article
Nearby Places

தாகேஸ்வரி தேசிய கோயில்
வங்காளதேசத்தில் டாக்கா தலைநகரிலுள்ள இந்து கோவில்
பங்களாதேஸ் சாரணர் சங்கம்

தன்மொண்டி நகரம்
ஆட்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரி

வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம்
வங்கதேசத்தில் உள்ள பன்னாட்டு மாநாட்டு மையம்

வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம், டாக்கா
வங்கதேசத்தில் உள்ள ஒரு கோளரங்கம்
பினாத் பீபி பள்ளிவாசல்
வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல்

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்
வங்காளதேசத்திலுள்ள ஓர் அருங்காட்சியகம்